top of page

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. சட்டத்தின் பெயர் என்ன?

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம், 1971.

2. உள்ளூர் திட்ட பகுதி (LPA) என்றால் என்ன?

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் பிரிவு 10(1)(b) இன் கீழ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, 10(4) பிரிவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட பகுதிதான், உள்ளூர் திட்ட பகுதி (LPA) எனப்படும். LPA என்பது நகரமயமாக்கப்பட்ட பெருநகரம் /நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உள்ளடக்கிய ஒரு தொடர்ச்சியான பகுதி.

3. உள்ளூர் திட்ட குழுமம் என்றால் என்ன?

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம், 1971-ன்  பிரிவு 11(3) இன் கீழ், அறிவிக்கப்பட்ட உள்ளூர் திட்ட பகுதியை அதன் அதிகார வரம்பாகக் கொண்டு, அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளைச் செயல்படுத்த, அரசால் உருவாக்கப்பட்ட ஒரு குழுமமே உள்ளூர் திட்ட குழுமம் எனப்படும்.

4. மாஸ்டர் பிளான் அல்லது முழுமை திட்டம் என்றால் என்ன?

மாஸ்டர் பிளான்/முழுமை திட்டம் என்பது ஒரு உள்ளூர் திட்ட பகுதிக்காக தயாரிக்கப்படும் ஒரு விரிவான மேம்பாட்டுத் திட்டமாகும். இது நிலையான மற்றும் சுற்றுச்சூழளுக்கு ஏற்றவாறு நகர்ப்புற வளர்ச்சியை அடுத்த 20 ஆண்டுகளில் அடைய எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு வழி பாதையை வழங்குகிறது.

5. உள்ளூர் திட்ட குழுமம் எந்த அரசு துறை/நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது?

நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் ஆலோசனையுடன் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இந்த உள்ளூர் திட்ட குழுமம் செயல்படுகிறது.

  • Facebook
  • X
bottom of page